FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா!

ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா வென்றுள்ளார்.

தீப்தி சர்மா - படம் | ஐசிசி
பகிர்:

ஐசிசியின் அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா வென்றுள்ளார்.

ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுகிறது. அதன் படி, அக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனைக்கான விருதினை இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா வென்றுள்ளார்.

Advertisement

Advertisement

அண்மையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்த விருதினை அவர் வென்றுள்ளார். வங்கதேசத்தின் ஷோபனா மொஸ்டாரி மற்றும் அன்னாபெல் சதர்லேண்ட் இருவரும் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்களாக இடம்பெற்ற நிலையில், தீப்தி சர்மா விருதினை வென்று அசத்தியுள்ளார். ஏற்கனவே ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ள தீப்தி சர்மா, இரண்டாவது முறையாக இந்த விருதினை வென்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றது குறித்து தீப்தி சர்மா பேசியதாவது: ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதினை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடர் மிகவும் சிறப்பானதாக அமைந்தது. இந்திய அணி செயல்பட்ட விதத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

சதம் விளாசியது மிகவும் சிறப்பான உணர்வைக் கொடுத்தது. எனக்கு இந்த விருது கிடைக்க ஆதரவாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலுள்ள என்னுடைய அனைத்து ரசிகர்களுக்கும் இந்த விருதினை அர்ப்பணிக்கிறேன் என்றார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா 155 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

summary

India has joined Pakistan on the list of teams with the worst records in the history of one-day cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.