ஹலோ கேப்டன்... சான்ட்னரின் செயலால் உற்சாகமான ரோஹித் சர்மா ரசிகர்கள்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா பொறுப்பேற்கவிருப்பது குறித்து...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா மீண்டும் பொறுப்பேற்கவிருப்பது மிட்செல் சான்ட்னரின் செயலால் உறுதிசெய்துள்ளதாக இணையத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஐபிஎல் 2027 சீசனுக்கு மும்பை அணியில் இருந்து ஹார்திக் பாண்டியா விலகியதால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட இருக்கிறார் என தகவல்கள் வெளியாகவருகின்றன.
Advertisement
Advertisement
ஹார்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் அர்ஷ்தீப் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி மழையினால் கைவிடப்பட்டது. ஏற்கெனவே தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், ஆட்டம் கைவிடப்பட்ட பிறகு நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சான்ட்னர் இந்திய வீரர் ரோஹித் சர்மாவிடம் ”ஹலோ ஸ்கிப்பர் (கேப்டன்)” எனக் கேட்க, ரோஹித் சர்மா நன்றி கூறும் விடியோ வைரலாகி வருகிறது.
மிட்செல் சான்ட்னர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அதனால், அவர் கூறியதும் இந்தச் செய்தி உண்மைதான் என ரோஹித் சர்மா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
தீபாவளி போஸ்டரிலும் ஹார்திக் பாண்டியா இடம்பெறாதது சர்ச்சையை உண்டாக்கியது. இது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.