அமேசானில் இன்று (நவ. 10) நள்ளிரவுடன் முடிகிறது தீபாவளி சலுகை!
அமேசான் இணைய விற்பனை தளத்தில் தீபாவளி சலுகை இன்று (நவ. 10) நள்ளிரவுடன் முடிவுக்கு வருவது குறித்து...
அமேசான் இணைய விற்பனை தளத்தில் தீபாவளி சலுகை இன்று (நவ. 10) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.
இதனால், இருப்பு வைக்கப்பட்டுள்ள சில பொருள்கள் விலை மேலும் குறைந்துள்ளது. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 விலை ரூ. 8,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தள்ளுபடி போக, 8GB உள்நினைவகம் + 128GB நினைவகம் உடைய ஸ்மார்ட்போன் விலை நிர்ணயிக்கப்பட்ட விலை ரூ. 40,999. சலுகையுடன் ரூ. 34,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ. 2,000 கூடுதல் சலுகை அளிக்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 சிறப்பம்சங்கள்
6.78 அங்குல அமோலிட் திரை
கார்னிங் கொரில்லா கிளாஸ்
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 144Hz திறன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 எஸ், 4 ஆம் தலைமுறை புராசஸர்
ஆன்டிராய்டு 16 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் இயங்குதளம்
50MP முதன்மை கேமரா, 32MP செல்ஃபி கேமரா
இதுமட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி எஸ் 25 அல்ட்ரா ரூ.94,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்பிளஸ் நோர்டு 6 ஸ்மார்ட்போன் ரூ. 44,999-க்கு விற்பனையாகிறது.
ஒன்பிளஸ் நோர்டு சிஇ6 லைட் ரூ. 32,499-க்கு விற்பனையாகிறது.