தீபாவளி: தமிழ்நாட்டில் 2 நாள்களில் ரூ. 441 கோடிக்கு மது விற்பனை!
தீபாவளியையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த நவ.7,8-ஆகிய தேதிகளில் ரூ.441 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த நவ.7,8-ஆகிய தேதிகளில் ரூ.441 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனையாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு மாநிலங்களில் மது விற்பனை உச்சத்தை தொடுவது வழக்கம். இந்நிலையில், தமிழகத்தில் தீபாவளிக்கு முந்தைய நாளான நவ.7-ஆம் தேதி சுமாா் ரூ.234.75 கோடிக்கும், தீபாவளி நாளில் சுமாா் ரூ.206.63 கோடிக்கும் என மொத்தம் ரூ.441.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
இதில், சென்னையில் ரூ.95.85 கோடி, திருச்சியில் ரூ.98.97 கோடி, சேலத்தில் ரூ.87.52 கோடி, மதுரையில்– ரூ.88.38 கோடி, கோவையில் ரூ.70.66 கோடி என்ற அளவில் மது விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
மேலும், திங்கள்கிழமை (நவ.9)அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் சுமாா் ரூ.192 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால், மூன்று நாள் மது விற்பனை சுமாா் ரூ.600 கோடியைத் தாண்டும் என்று கணக்கிடப்படுகிறது.