FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க செய்ய வேண்டியது என்ன? கேஒய்சி அவசியமா?

வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க கேஒய்சி அவசியமா என்பது பற்றி..

மத்திய ரிசர்வ் வங்கி (கோப்புப்படம்) - file photo
பகிர்:

வங்கி தரப்பிலிருந்து உங்கள் கணக்கில் மறு கேஒய்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதா? அவ்வாறு எனும் அது மிகவும் முக்கியம் என்பது புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆர்பிஐ அறிவுறுத்தியிருக்கிறது.

பல்வேறு முக்கிய தகவல்களை, மக்களுக்கு நேரடியாகவே ஆர்பிஐ அறிவுறுத்தியும், வழிகாட்டியும் வருகிறது.

Advertisement

Advertisement

அந்த வகையில் ஆர்பிஐ வெளியிட்டிருக்கும் தகவலில்,

வங்கி தரப்பிலிருந்து உங்கள் கணக்கில் மறு கேஒய்சி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதா?

உங்கள் வங்கிக் கணக்கைச் செயல்பாட்டில் வைத்திருக்க, இன்றே கேஒய்சி (KYC) தகவல்களை புதுப்பிக்கவும்!

தனிப்பட்ட விவரங்களில் எந்த மாற்றமும் இல்லை அல்லது முகவரியில் மட்டும் மாற்றம் என்றால்→

சுய உறுதிமொழி ஆவணம் (ஆன்லைன் அல்லது வங்கிக் கிளை மூலம்) கொடுப்பதே போதுமானது!

தனிப்பட்ட விவரங்களில் மாற்றம் என்றால் →

ஆன்லைனில் செய்யுங்கள்: ஆதார் ஓடிபி மூலம் மின்னணு கேஒய்சி அல்லது விடியோ மூலம் கேஒய்சி செய்யலாம்.

நேரில் வங்கிக்குச் செல்ல வேண்டும் என்றால், உங்கள் வங்கியின் எந்தவொரு கிளையிலும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும்:

ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம் / கடவுச்சீட்டு / பணி அட்டை

எச்சரிக்கை: கேஒய்சி புதுப்பித்தல் தொடர்பான போலியான செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். வேறு எந்த வகைகளிலும் கேஒய்சி செய்யப்படுவதில்லை என்பதை உணர்த்தும் வகையில் இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது.

21 அக்டோபர் 2026 முதல் 31 டிசம்பர் 2026 வரை உங்கள் அருகிலுள்ள கேஒய்சி புதுப்பிப்பு முகாமிற்குச் செல்லுங்கள்

மேலும் விவரங்களுக்கு: https://rbikehtahai.rbi.org.in/tamil/RBIREKYC.html

ரிசர்வ் வங்கி சொல்கிறது – விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.