FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஷஃபாலி வர்மா புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

6 செப்டம்பர் 2026, 11:29 am IST
ஷஃபாலி வர்மா - படம் | AP
பகிர்:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபை சர்வதேசத் திடலில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையான ஷஃபாலி வர்மா 6 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து அவர் சாதனை படைத்துள்ளார்.

Advertisement

Advertisement

இதுவரை இந்திய அணிக்காக 114 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷஃபாலி வர்மா 3005 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 19 அரைசதங்கள் அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 81.

பாகிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

summary

Indian opener Shafali Verma has set a new record in international T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments