டிராவிஸ் ஹெட்டை விடுவித்த சன்ரைசர்ஸ், மிட்செல் ஸ்டார்க்கை விடுவித்த தில்லி கேபிடல்ஸ்!
ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் ஐபிஎல் தொடரில் அவர்களது அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் இருவரும் ஐபிஎல் தொடரில் அவர்களது அணிகளால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்தாண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக வீரர்களுக்கான ஐபிஎல் மினி ஏலம் அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பாக அணிகள் அனைத்தும் வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் வருகின்றனர். வீரர்களை தக்கவைப்பதற்கு இன்றே கடைசி நாள் என்பதால் அணிகள் அனைத்தும் தங்களது நிர்வாக முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட்டும், தில்லி கேபிடல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் விடுவிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் விடுவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனுபவம் வாய்ந்த மிட்செல் ஸ்டார்க்கும் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களை ஏலத்தில் எடுக்க அணிகளுக்குள் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.