ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை உயர்வு? பிசிசிஐ செயலாளர் பேட்டி!
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அளித்த பேட்டி குறித்து...
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “ஐபிஎல் அணிகளின் உயர்வு குறித்து இதுவரை எந்த கலந்துரையாடலும் நடைபெறவில்லை” எனக் கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் போட்டிகளுக்கான வணிகம் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால், அணிகளின் எண்ணிக்கை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
தற்போது ஐபிஎல் அணிகளுக்கான டிரேடிங் நடைபெற்று வருகின்றன. ஹார்திக் பஞ்சாபிற்கும் அர்ஷ்தீப் மும்பைக்கு மாறியுள்ளார்கள். இந்த நிலையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
2028ல் ஐபிஎல் அணிகளின் எண்ணிக்கை 12ஆக உயருமென நாங்கள் இதுவரை அதிகாரபூர்வமாகவோ, அதிகாரபூர்வமற்றோ எந்தவொரு கலந்துரையாடலையும் நடத்தவில்லை. இந்தக் கடத்தில் அது எங்களது நோக்கமாக இருக்கவில்லை.
இப்போதைக்கு 2027 ஐபிஎல் போட்டிகள் மட்டுமே கவனத்தில் கொண்டுள்ளோம். இது 20ஆவது எடிஷனாக நடைபெற இருக்கிறது. அதனால், இது மிகப்பெரிய கவனம் பெறும். இதனைத் தாண்டி வேறு எதையும் நாங்கள் பொருட்படுத்தவில்லை.
ஊடகங்களில் இந்த மாதிரியான செய்திகள் பரவும்போது, இதெல்லாம் யாரோ செழிப்பான ஒரு கற்பனையாளரின் தகவலாகவே கருதுகிறோம். இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்த மாதிரியான தகவல்களில் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை என்றார்.
ஜனவரியில் ஐபிஎல் போட்டிகள் நடந்த கேகேஆர் துணை உரிமையாளரும் பாலிவுட் நடிகருமான ஜூஹி சாவ்லா எக்ஸ் பக்கத்தில் கேட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த பிசிசிஐ செயலாளர், “ஐபிஎல் 2027 போட்டிகள் மார்ச் மாதத்தில் தொடங்கும். அவ்வளவுதான்” என முடித்துக்கொண்டார்.