FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஐபிஎல் தொடரில் விளையாடுவது பற்றி மௌனம் கலைத்த பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்!

ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தெரிவித்துள்ளதைப் பற்றி...

55 வினாடிகள் முன்பு
முகமது அமீர்.
பகிர்:

ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விளையாடவுள்ளதாக வெளியான தகவலுக்கு அவர் மௌனம் கலைத்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் மும்பை, சென்னை, பெங்களூரு உள்பட 10 அணிகள் மோதும் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் நிலையில், இந்தத் தொடருக்கான ஏலம் வருகிற டிசம்பரில் கோவாவில் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர், பிரிட்டன் குடியுரிமை பெற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்து குடிமகனாக ஏலத்தில் பங்கேற்கப் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

Advertisement

Advertisement

2008 ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல், வெளியுறவு பதற்றங்கள் காரணமாக, பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சீசனுக்குப் பிறகு பாகிஸ்தான் குடியுரிமை கொண்ட எந்தவொரு வீரரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்காத நிலையில், முகமது அமீர் விளையாடுவது தொடர்பான தகவல்கள் பேசுபொருளாகின.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து முகமது அமீர் மௌனம் கலைத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “அனைவருக்கும் வணக்கம், ஐபிஎல் தொடர்பான செய்தி உண்மையல்ல என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

முகமது அமீர் 2024-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்து வழக்குரைஞர் நர்ஜிஸ் காத்துனை 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட அமீர், பிரிட்டனின் குடியுரிமையைப் பெற்றார். 2026 மே மாதத்தில் அவர் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் குடியுரிமை பெற்றார்.

பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றதன் மூலம், இங்கிலாந்தின் உள்ளூர் தொடர்களான டி20 பிளாஸ்ட் மற்றும் தி ஹன்ட்ரெட் போட்டிகளில் உள்ளூர் வீரராக அவர் விளையாடி வருகிறார். ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலத்திலும் இங்கிலாந்து குடிமகனாகவே அமீர் பதிவு செய்துள்ளார்.

summary

Former Pakistan pacer Mohammad Amir has responded to a report suggesting he could enter the IPL 2027 mini-auction as a British citizen, insisting that the speculation is untrue.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments