டிராவிஸ் ஹெட் ஐபிஎல் 2027 சீசனில் இருந்து விலகல்? அதிர்ச்சியில் ஹைதராபாத் ரசிகர்கள்!
ஐபிஎல் 2027 சீசனில் இருந்து டிராவிஸ் ஹெட் விலகுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது பற்றி...
ஐபிஎல் 2027 சீசனில் இருந்து டிராவிஸ் ஹெட் விலகுவதாக வெளியாகியுள்ள தகவல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவிலான டி20 கிரிக்கெட்டில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வணிக அளவிலும் முதலிடம் பிடித்துள்ளது.
Advertisement
Advertisement
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரேயொரு முறை (2016) மட்டுமே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இரண்டு முறை இறுதிப் போட்டியில் தோல்வியுற்றுள்ளது.
சிஎஸ்கே அணியில் இருந்து நாதன் எல்லீஸ், கலீல் அகமது சமீபத்தில் சன்ரைசர்ஸ் அணியில் டிரேடிங் மூலம் இணைந்தார்கள். இந்த நிலையில், டிராவிஸ் ஹெட் பற்றிய செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சன்ரைசர்ஸ் அணியில் அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் இணைந்து அதிரடியான தொடக்க வீரர்களாக இருக்கிறார்கள். இதில் டிராவிஸ் ஹெட் இல்லாமல் போனால் இந்த அதிரடி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்த அணியாக சன்ரைசர்ஸ் அணியே இருப்பது குறிப்பிடத்தக்கது. ஜீசன் அன்சாரியை விற்று அதற்குப் பதிலாக நடராஜனை வாங்கியதும் நினைவுக்கூரத்தக்கது.
பந்துவீச்சில் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலமாக மாறியுள்ளது. டிராவிஸ் ஹெட்டிற்கு வேலைப் பளு காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.