டி20 கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை!
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதலில் விளையாடியது.
இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மனுல்லா குர்பாஸை வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 0 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம், டி20 போட்டிகளில் அவர் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
Advertisement
Advertisement
மேலும், டி20 போட்டிகளில் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். டி20 போட்டிகளில் இதற்கு முன்பாக இந்திய அணிக்காக யுஸ்வேந்திர சஹால் மற்றும் புவனேஷ்வர் குமார் 350 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.
Indian fast bowler Jasprit Bumrah has set a new record in T20 cricket.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.