FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகல்?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளார்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 4:37 pm IST
ஜஸ்பிரித் பும்ரா - படம் | AP
பகிர்:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளார்.

இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரிலிருந்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது, ஜஸ்பிரித் பும்ராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்து ஜஸ்பிரித் பும்ரா முழு உடல்தகுதி பெற்றுவிட்டார் என அண்மையில் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், காயத்திலிருந்து குணமடைந்துவிட்ட போதிலும் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் அசௌகரியமாக உணர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வேலைப்பளு அதிகம் நிறைந்த டெஸ்ட் வடிவிலான போட்டிகளில் அவர் விளையாடுவது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து ஜஸ்பிரித் பும்ரா விலகவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக ஜம்மு காஷ்மீர் வேகப் பந்துவீச்சாளர் ஆகிப் நபி அல்லது விதர்பாவின் யஷ் தாக்குர் அணியில் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

காயம் காரணமாக முதல் டெஸ்ட்டிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஏற்கனவே விலகியது குறிப்பிடத்தக்கது.

summary

Indian fast bowler Jasprit Bumrah has withdrawn from the Test series against Sri Lanka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments