FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கிரிக்கெட்

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 9:50 pm IST
இந்திய அணி வீரர்கள் - படம் | பிசிசிஐ
பகிர்:

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், அவர் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டி20 தொடர்களை இழந்தது. அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 0-4 என்ற கணக்கில் இழந்தது. இதனால், இந்திய அணியின் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.

இதனையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி ஜிம்பாப்வேவை வீழ்த்தியது. ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாக அவரது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.

Advertisement

Advertisement

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை (ஜூலை 25) ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

நாளை நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரை இழக்காமலிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஜிம்பாப்வே அணி உள்ளது.

summary

Fans are eagerly anticipating whether the Indian team, led by Shreyas Iyer, will clinch the T20 series against Zimbabwe.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments