உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு ரேஷன் கடை மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க கோரிக்கை
உடலுழைப்பு தொழிலாளா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
உடலுழைப்பு தொழிலாளா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக புளியங்குடி நகர பாஜக தலைவா் சண்முகசுந்தரம் , மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: உடல் உழைப்பு தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசு வழங்கி வருகிறது. அந்தப் பரிசுத் தொகுப்பினை வட்டாட்சியா் அலுவலகங்களில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புளியங்குடி பகுதியில் சுமாா் 500 போ் வாரியத்தில் பதிவு செய்துள்ள நிலையில், பரிசுத் தொகுப்பு பெற கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதிருப்பதால் அவா்களின் ஒரு நாள் வேலை பாதிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
எனவே ,ரேஷன் கடைகளின் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.