FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்த பங்குகள்!

இன்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

பங்குச்சந்தை
பகிர்:

மும்பை: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றம் மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலையேற்றம் உள்ளிட்டவையால், பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் நிறைவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 372.10 புள்ளிகள் சரிந்து 76,728.37 என்ற அளவிலும், நிஃப்டி 50 குறியீடு 109.75 புள்ளிகள் சரிந்து 23,946.25 என்ற அளவில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் அதிக லாபம் மற்றும் நஷ்டம் அடைந்த பங்குகளின் நிலை வருமாறு.

Advertisement

Advertisement

நிஃப்டி 50 - அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள்

மேக்ஸ் ஹெல்த்கேர் | +2.37%

கோல் இந்தியா | +2.18%

டாக்டர் ரெட்டிஸ் | +1.87%

எடர்னல் | +1.67%

ட்ரெண்ட் | +1.31%

என்டிபிசி | +1.16%

ஹிண்டால்கோ | +1.12%

பிஇஎல் | +1.09%

சிப்லா | +0.98%

பவர் கிரிட் | +0.83%

நிஃப்டி 50 - அதிகம் நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்

கோட்டக் மஹிந்திரா வங்கி | -3.31%

மஹிந்திரா & மஹிந்திரா | -2.81%

அதானி என்டர்பிரைசஸ் | -2.49%

இன்டர்குளோப் ஏவியேஷன் | -2.48%

மாருதி சுஸுகி | -2.43%

டாடா மோட்டார்ஸ் | -2.31%

ஐச்சர் மோட்டார்ஸ் | -2.27%

பஜாஜ் ஆட்டோ | -2.17%

டாடா கன்சூமர் ப்ராடக்ட்ஸ் | -1.64%

கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் | -1.49%

ஆக்சிஸ் வங்கி | -1.49%

சென்செக்ஸில் - அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்கள்

எடர்னல் | +1.39%

ட்ரெண்ட் | +1.34%

பிஇஎல் | +1.34%

என்டிபிசி | +1.09%

பவர் கிரிட் | +0.88%

சன் பார்மா | +0.56%

டாடா ஸ்டீல் | +0.48%

ஏசியன் பெயின்ட்ஸ் | +0.43%

எச்டிஎஃப்சி வங்கி | +0.37%

பஜாஜ் ஃபைனான்ஸ் | +0.31%

சென்செக்ஸில் - அதிக நஷ்டம் அடைந்த நிறுவனங்கள்

கோட்டக் மஹிந்திரா வங்கி | -3.24%

மஹிந்திரா & மஹிந்திரா | -2.79%

மாருதி சுஸுகி | -2.12%

இன்டர்குளோப் ஏவியேஷன் | -2.05%

அல்ட்ராடெக் சிமெண்ட் | -1.37%

ஆக்சிஸ் வங்கி | -1.37%

லார்சன் & டூப்ரோ | -1.32%

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் | -1.32%

ஹிந்துஸ்தான் யூனிலீவர் | -1.23%

அதானி போர்ட்ஸ் | -1.09%

வார இறுதியில், அமெரிக்காவும் ஈரானும் ஹோர்முஸ் நீரிணையில் நடத்திய தாக்குதலால் பதற்றங்கள் அதிகரித்தன. பிறகு சண்டையை நிறுத்தி, பேச்சுவார்த்தை தொடங்க ஒப்புக்கொண்டதால், இழப்புகள் கட்டுக்குள் இருந்தன.

ஆசியாவில், தென் கொரியாவின் கோஸ்பி சரிவுடன் முடிவடைந்த நிலையில், ஜப்பானின் நிக்கெய் 225, சீனாவின் ஷாங்காய் காம்போசிட் மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் ஆகியவை உயர்ந்தன.

ஐரோப்பிய சந்தைகள் பிற்பகல் வர்த்தகத்தில் சரிவுடன் வர்த்தகமான நிலையில், அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமையன்று சரிவுடன் முடிவடைந்தன.

summary

Here are the top gainers and losers of the day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments