தவெகவின் தோழமை கட்சிக் கூட்டம்: ஐயூஎம்எல், மதிமுகவுக்கு நேரில் அழைப்பு!
தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம் பற்றி...
தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனுக்கும் ம்ஃஅதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கும் திங்கள்கிழமை (ஜூன் 29) நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தவெக சார்பில் நடத்தப்படவுள்ளது. முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் வருகிற ஜூலை 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவனுக்கு நேற்று அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோருக்கும் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் இன்று நேரில் சந்தித்து முறையாக அழைப்பு விடுத்தனர்.
IUML leader Kader Mohideen was personally invited on Monday (June 29) to participate in the thanksgiving meeting for alliance parties organized by TVK.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.