முகப்பு
தமிழ்நாடு

தவெக தோழமை கட்சிக் கூட்டம்: இடதுசாரிகளுக்கு நேரில் அழைப்பு!

தவெக தோழமை கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இடதுசாரிகளுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது பற்றி...

Updated On : 30 ஜூன் 2026, 5:34 pm IST
தவெக தோழமை கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க இடதுசாரிகளுக்கு அழைப்பு - X
பகிர்:

தவெக நடத்தும் தோழமை கட்சிகளுக்கான நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக தனிப் பெரும்பான்மைப்புக்குத் தேவையான 118 தொகுதிகள் இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவை நாடியது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சி அமைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் தவெக சார்பில் நடத்தப்படவுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் முதல்வர் விஜய் தலைமையில் நாளை (ஜூலை 1) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் மு. வீரபாண்டியன் ஆகியோரை அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்து இன்று அழைப்பு விடுத்தனர்.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் பங்கேற்க விசிக தலைவர் திருமாவளவன், ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், மதிமுக பொதுச் செயலர் வைகோ ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

summary

TVK alliance party meeting: Left parties invited in person

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments