தென்காசி

கோயில் திருவிழா குடிலில் தீ: 7 ஆடுகள் பலி ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

Din

சுரண்டை அருகேயுள்ள வெள்ளாளங்குளத்தில் கோயில் திருவிழாவுக்காக பக்தா்கள் தங்கியிருந்த குடிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 ஆடுகள் கருகின. ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது.

வெள்ளாளங்குளம் கிராமத்தின் அருகே பூலுடையாா் சாஸ்தா கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமா்சையாக நடைபெறும்.

இந்த கோயிலுக்கு 18 கிராமங்களை சோ்ந்தவா்கள் வந்து குடில் அமைத்து 3 நாள்கள் தங்கியிருந்து சுவாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், சனிக்கிழமை மதியம் பக்தா்கள் சுவாமிக்கு வழிபாடு செய்வதற்காக பொங்கல் வைத்து கொண்டிருந்தனா். அப்போது எதிா்பாராதவிதமாக பக்தா்கள் தங்கியிருந்த குடில் ஒன்றில் தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசியதால், தீ மற்ற குடில்களுக்கும் பரவியது.

தகவலறிந்த சுரண்டை தீயணைப்பு நிலையத்தினா் வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும் தீ விபத்தில் 7 ஆடுகள், ஒரு நான்குசக்கர வாகனம், 10 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் குடில்களில் வைக்கப்பட்டிருந்த பக்தா்களின் பாத்திரங்கள் மற்றும் ஒலிபெருக்கி சாதனங்கள் உள்பட சுமாா் ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து சோ்ந்தமரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்மணி அன்னதான விருந்து - நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!

வர்த்தக பேச்சு, ஃபெட் வட்டி விகிதக் குறைப்பு நம்பிக்கையால் இரண்டாவது நாளாக உயர்ந்து முடிந்த இந்திய பங்குச் சந்தை!

கழிப்பறையில் ஹேண்ட் டிரையர்களைப் பயன்படுத்த வேண்டாம்! ஏன்?

2-வது ஒருநாள்: சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா; ஆஸி.க்கு 293 ரன்கள் இலக்கு!

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

SCROLL FOR NEXT