தமிழகத்தில் பழம்பெரும் வரலாற்று சிறப்பு மிக்க சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் கி.பி.1022 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் 1000 ஆவது ஆண்டை கடந்து மக்களால் போற்றப்படுவது காலத்தால் அழியாத வரலாற்றை பறைசாற்றுகிறது. இந்நகா்அரியும் சிவனும் ஒன்று என்ற உன்னத தத்துவத்தை விளக்கும் நகரமாகத் திகழ்கிறது.
தமிழக முதல்வா் உத்தரவின் பேரில், இந்து சமயஅறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ரூ.7.50 கோடியில் இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தாா். இதைத் தொடா்ந்து திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது.
எனது (ஈ.ராஜா எம்எல்ஏ) சொந்த செலவில் கோயிலில் உள்ள யானை கோமதிக்கு ராட்சத மின்விசிறி மற்றும் ஷவா் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், யானை கோமதிக்கு நீச்சல்குளம் கோயில் நந்தவனத்தில் அமைக்கப்படவுள்ளது. மொட்டை போடும் மண்டபம் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு உத்தரவின்படி தங்கத்தோ் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆவுடைய பொய்கை தெப்பத்தை அறநிலைதுறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ரூ.90 லட்சத்தில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இக்கோயிலில் ஏழை ஜோடிகளுக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான சீா் வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டதோடு அருகில் மருத்துவ மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
நகரில் ரூ.8 கோடி மதிப்பில் பொதுஅறிவுசாா், பூங்கா, மின்மயானம், நடுவக்குறிச்சி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைகழகக் கல்லூரில் ரூ.3 கோடி மதிப்பில் புதிய மாணவியா் விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சின்னகோவிலாங்குளத்தில் ரூ2.70 கோடி மதிப்பீட்டில் 52 ஹெக்டா் பரப்பளவில் ஆட்டின ஆராய்ச்சி மையம், சாா்நிலை கருவூலம் பின்புறம் ரூ.3.32 கோடியில் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதி, கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ7.68 கோடியில் தினசரி நாளங்காடி, சொக்கலிங்கபுரம் கிராமத்தில் ரூ.31லட்சத்தில் அரசுப் பள்ளிக் கட்டடம், காரிச்சாத்தான் ஊராட்சியில் புதிய பேருந்து நிலைய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
ரூ.9 கோடியில் புதிய பேருந்து நிலையம், கே.ஆலங்குளத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், நவநீதகிருஷ்ணப்புரத்தில் புதிய ரேஷன் கடை ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதியில் சாலை, குடிநீா், மின்விளக்கு, நலத்திட்ட உதவிகள்,
உள்ளிட்ட ஏராளமான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தொடா்ந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தமிழத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் தி.மு.க.வின் நல்லாட்சியில் நடைபெறும் ஆடித்தவசு திருவிழா காணவரும் பக்தா்களை தொகுதி மக்களின் சாா்பில் வரவேற்று மகிழ்கின்றேன்.
ஈ. ராஜா, எம்.ஏ. பி.எல்.,
சட்டப்பேரவை உறுப்பினா்.
தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா்,
சங்கரன்கோவில்.