தென்காசி

ஆலங்குளத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் நகரில் பகல் நேரத்தில் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

ஆலங்குளம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து எம்-சான்ட், ஜல்லிகற்கள், சிறிய அளவிலான பாறைகள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்காக உள்ளூருக்கும், கேரளத்துக்கும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

இதில், கேரளத்துக்கு எடுத்துச் செல்லப்படும் கனரக வாகனங்கள் அளவில் பெரியதாகவும் சாலையை அடைத்தும் செல்வதால் பகல் நேரத்தில் ஆலங்குளம் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இந்த வாகனங்கல் பகலில் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. சமீப காலமாக உத்தரவை மீறி கனரக வாகனங்கள் பகலிலும் நகரில் சாலைகளில் வேகமாகச் செல்கின்றன. இதனால் பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நலன் கருதி ஆலங்குளம் நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிப்பதோடு உத்தரவை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT