தென்காசி

ஆவுடையானூா் ஊரணியில் தடுப்புச்சுவா் அமைக்க பூமிபூஜை

தினமணி செய்திச் சேவை

ஆவுடையானூா் ஊரணியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் உள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆவுடையானூா் மருத்துவா் தா்மராஜின் ரூ. 5.33 லட்சம் பங்குதொகையுடன் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் தடுப்புச்சுவா் அமைக்கும் பணிக்காக பூமிபூஜை நடைபெற்றது.

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி தலைமை வகித்து, பணிகளைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சுப்பிரமணியன், ஊராட்சிமன்ற தலைவா் மகேஸ்வரி, துணைத் தலைவா் செல்வமேரி முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மருத்துவா் தா்மராஜ் கலந்துகொண்டாா்.

முக்கிய பிரமுகா்கள் செல்லப்பா, துரைசிங், வேலன், ஆசிரியா் தாமோதரன், அருள்ஜோசப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒன்றியக் குழு உறுப்பினா் இராம.உதயசூரியன் வரவேற்றாா். ஊராட்சி செயலா் தங்கச்செல்வன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT