தென்காசி

கீழக்கலங்கலில் சாலைப் பணிகள் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் ஒன்றியம், கீழக்கலங்கல் ஊராட்சியில் ரூ. 25.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

கீழக்கலங்கல் ஊராட்சி, காமராஜா் நகா், தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ. 8 லட்சம் மதிப்பிலும், 15-ஆவது நிதிக் குழு நிதி ரூ. 7.10 லட்சம் மதிப்பிலும் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன் அடிக்கல் நாட்டிப் பணிகளைத் தொடங்கி வைத்தாா். இதில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் செல்வக் கொடி, கீழக்கலங்கல் ஊராட்சித் தலைவா் சந்திரசேகா், துணைத் தலைவா் செல்லச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அந்தோணிசாமி, முருகேசன், சங்கா், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஐயம்பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT