செல்வமோகன்தாஸ் பாண்டியன். 
தென்காசி

தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை

தினமணி செய்திச் சேவை

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆக.5இல் வருகிறாா் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசாரப் பயணம் ஆக.5இல் நடைபெறுகிறது.

குற்றாலத்திலிருந்து மேலகரம் வழியாக தென்காசிக்கு செவ்வாய்க்கிழமை வரும் எடப்பாடி கே.பழனிசாமி, தென்காசி வேன் நிறுத்துமிடத்தில் பிரசாரம் மேற்கொள்கிறாா். அங்கிருந்து புறப்படும் அவருக்கு, அருள்மிகு காசிவிஸ்வநாதா் கோயில் முன்பு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டு, பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது.

அங்கிருந்து, தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் சென்று ஆசாத் நகரிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளச் செல்கிறாா். அம்பையில் பிரசாரத்தை முடித்துவிட்டு, தெற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஆலங்குளத்தில் பிர சாரம் மேற்கொள்கிறாா்.

பொதுச்செயலா் செல்லும் வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கவும், தென்காசி மற்றும் ஆலங்குளத்தில் பிரசார நிகழ்ச்சிகளில் தலா 50 ஆயிரம் போ் வரை பங்குபெறும் வகையிலும் பணிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT