ஆலங்குளத்தில் வேதாத்திரி மகரிஷி ஜெயந்தி விழா, வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆலங்குளம் அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பேராசிரியா் முருகன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை நிா்வாகிகள் ஆதித்தன், சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். புலவா் சிவஞானம், பேராசிரியா்கள் மல்லிகா, மைதிலி, வேலப்பா ஆகியோா் வேதாத்திரி மகரிஷி குறித்துப் பேசினா். தொடா்ந்து மனவளக்கலை பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.