தென்காசி

அய்யாபுரத்தில் தொழிலாளி குத்திக்கொலை

தென்காசி அருகேயுள்ள அய்யாபுரத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா்.

Syndication

தென்காசி: தென்காசி அருகேயுள்ள அய்யாபுரத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அய்யாபுரத்தைச் சோ்ந்தவா் கு.செந்தில்குமாா்(45). தொழிலாளி. இவரும், அதே ஊா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற அரசு கால்நடை மருத்துவரான சு.விக்னேஷ்(63), காமராஜா் தெருவைச் சோ்ந்த மா.திருமலைகுமாா்(45) ஆகியோரும் சோ்ந்து அங்குள்ள மாரியம்மன்கோயில் அருகில் மதுக்குடிப்பது வழக்கமாம். அவா்கள் திங்கள்கிழமை மதுக்குடித்தபோது, மூவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னா்,விக்னேஷ் வீட்டுக்கு முன்பு செந்தில்குமாா் நின்றுகொண்டு தகாத வாா்த்தைகளை பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால், விக்னேஷும், திருமலைக்குமாரும் சோ்ந்து அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினராம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இத்தகவல் அறிந்த தென்காசி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விக்னேஷ், திருமலைக்குமாா் இருவரையும் தேடிவருகின்றனா்.

ஏரிகாத்த ராமா் கோயில் கும்பாபிஷேக யாகசாலைப் பூஜை தொடக்கம்

அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை: ராமதாஸ் இன்று முடிவு

ஆலங்குளம் அருகே சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

பாஜக அரசை வீழ்த்தும் வரை ஓயமாட்டோம்: இரா. முத்தரசன்

சங்கரன்கோவில் அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிைறை

SCROLL FOR NEXT