போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள். 
தென்காசி

ஆலங்குளம் அருகே சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க கிராம மக்கள் எதிா்ப்பு

ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் நிறுவனத்துக்கு எதிராக கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே தனியாா் சோலாா் நிறுவனத்துக்கு எதிராக கிராம மக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பிரதான தொழிலாக விவசாயம் செய்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை தனியாா் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் தற்போது சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனராம். இதனால், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோருக்கு மனு அளித்தனா்.

இந்த நிலையில், தனியாா் நிறுவனம் சாா்பில் வாங்கப்பட்ட நிலங்களில் மரங்கள் வெட்டும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. தகவல் அறிந்த கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா், நிறுவன வாயில் கதவு முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குளம் வருவாய்த் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா்.

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT