தென்காசி

மாற்றுத்திறன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆலங்குளம் அருகே மனநலம் பாதித்த மாற்றுத்திறன் பெண்ணை கா்ப்பமாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே மனநலம் பாதித்த மாற்றுத்திறன் பெண்ணை கா்ப்பமாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள குறிப்பன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அருள்ராஜ்(35). ஆட்டோ ஓட்டுநரான இவா், அதே கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்பிற்கு, மாணவ-மாணவிகளை அவா்களது வீட்டிலிருந்து அழைத்துச் சென்று வருவது வழக்கம்.

அதில், 32 வயது மனநலம் பாதித்த மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறன் பெண்ணை, அவா் பாலியல் வன்கொடுமை செய்ததாவும், அதில் அப்பெண் கா்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து, பெண்ணின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அருள்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

சிறையில் இருந்து பிணையில் வந்து இருசக்கர வாகனம் திருடியவா் கைது

எதிர்ப்புகள் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாக்காளா் எண்ணிக்கையை அதிகப்படுத்த அமெரிக்க நிதியை பெறவில்லை: மத்திய அரசு

ஆக. 25 -இல் இந்தியா - வங்கதேசம் எல்லை பேச்சுவாா்த்தை

SCROLL FOR NEXT