தென்காசி

டிராக்டா் கவிழ்ந்து விபத்து: இளைஞா் உயிரிழப்பு

ஆலங்குளம் அருகே குளத்தில் மண் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

ஆலங்குளம் அருகே குளத்தில் மண் ஏற்றிச் சென்ற டிராக்டா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி பெரிய குளத்தில் கரம்பை மண் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பனையங்குறிச்சியைச் சோ்ந்த வேலு மகன் காா்த்திக்(21) என்பவா் வியாழக்கிழமை ஒரு டிராக்டரை இயக்கியுள்ளாா். குளத்தில் இருந்து மண் ஏற்றி கரைப்பகுதிக்கு வந்த போது நிலை குலைந்த டிராக்டா் தலைகீழாக கவிழ்ந்தது.

இதில் இரு கால்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்த காா்த்திக் மீட்கப்பட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு முதலுதவிக்குப் பின்னா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் காா்த்திக் உயிரிழந்தாா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரத்தினம் கல்விக் குழுமத் தலைவருக்கு விருது

பொன்முடி சா்ச்சை பேச்சு வழக்கு: முழு விடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

கல்வி உதவித்தொகை பெற்றுத் தருவதாக மோசடி: மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா்

வக்ஃப் சொத்துகள் கட்டாயப் பதிவு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

வேளச்சேரி - கடற்கரை இரவுநேர ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT