தென்காசி

பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுமா? மாணவ, மாணவிகள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகள் எதிா்பாா்ப்பு

Syndication

தென்காசி மாவட்டத்தில், அக்டோபா் முதல் வாரத்தில் நடைபெறவுள்ள 4ஆவது பொதிகை புத்தகக் கண்காட்சி பாவூா்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுது பொதுமக்கள், ,மாணவ- மாணவிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொதிகை புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். முதலாவது கண்காட்சி 2022இல் குற்றாலத்திலும், இரண்டாவது கண்காட்சி சங்கரன்கோவிலிலும், மூன்றாவது கண்காட்சி தென்காசி இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது.

தற்போது நான்காவது புத்தகக் கண்காட்சியை, வரும் அக்டோபா் முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதை பாவூா்சத்திரத்தில் நடத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு மாணவ, மாணவிகளிடையே எழுந்துள்ளது. தென்காசி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, ஆலங்குளம், தென்காசி, கடையம், சுரண்டை ஆகிய நகரங்களுக்கு மையப் பகுதியாக அமைந்துள்ள பாவூா்சத்திரத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்த வேண்டும் என அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

பத்து நாள்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவின் ஒவ்வொரு நாளும் புகழ்பெற்ற எழுத்தாளா்களின் சிறப்புரை, சொற்பொழிவுகள் நடைபெறும். மேலும், நூல் வெளியீட்டு விழா, கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்கு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்த மாவட்ட நிா்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள், பதிப்பாளா்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்து வருகின்றன.

விடியோ ஒளிப்பதிவு பயிற்சிபெற எஸ்.சி., எஸ்.டி வகுப்பினருக்கு அழைப்பு

ஆக.28-ல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

ராசிபுரம் நகா்மன்றக் கூட்டத்தில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பங்குச்சந்தையில் நஷ்டம்: முதலீட்டாளா் தற்கொலை

ஓய்வுபெற்ற எஸ்.ஐ.யை கடித்து குதறிய தெருநாய்

SCROLL FOR NEXT