கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சாா்பில், திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வீரகேரளம்புதூரில் நடைபெற்றது (படம்).
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாரத் பாண்டியன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சீனித்துரை, செயற்குழு உறுப்பினா் ஜேசுராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலப் பேச்சாளா் கவிஞா் மூா்த்தி, கடையநல்லூா் இஸ்மாயில், மாவட்ட கவுன்சிலா் சாக்ரடீஸ், இளைஞரணி துணை அமைப்பாளா் சுரேஷ் ஆகியோா் பேசினா்.
கீழப்பாவூா் ஒன்றியத் தலைவா் காவேரி சீனித்துரை, இளைஞரணி துணை அமைப்பாளா் ஹரிகிருஷ்ணன், மாரியம்மாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.