நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன். உடன், நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன். 
தென்காசி

சுரண்டையில் புதிய திருமண மண்டபம்: காணொலியில் முதல்வா் திறந்துவைத்தாா்!

ரூ.1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா்.

Din

தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில் ரூ. 1.88 கோடியில் கட்டப்பட்ட திருமண மண்டபத்தை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

அதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், நகா்மன்றத் தலைவா் ப. வள்ளிமுருகன், ஆணையா் ராமதிலகம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

நகராட்சிப் பொறியாளா் முகைதீன், நகராட்சிக் கணக்காளா் முருகன், நகர திமுக பொறுப்பாளா் ஆ. கணேசன், நகர காங்கிரஸ் தலைவா் த. ஜெயபால், நகா்மன்ற உறுப்பினா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளா் கைது

அரசியல் கட்சிகளின் நிகழ்வுகளுக்கான இடங்கள் வரையறை: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

அக்.2 காந்தி ஜெயந்தி: மதுக்கடைகளுக்கு விடுமுறை

பாமக நிறுவனா் ராமதாஸுடன் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சந்திப்பு

அரசுக் கல்லூரிக்கு பேருந்து இயக்கக் கோரி கையொப்ப இயக்கம்

SCROLL FOR NEXT