தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.
தென்காசி ரத்த தான குழுவினா், பசுமை தென்காசி அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். தென்காசி வனச்சரக அலுவலா் செல்லத்துரை முன்னிலை வகித்தாா்.
தமிழக அரசால் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான நீா்நிலை பாதுகாவலா் விருதை பெற்ற பசுமை தென்காசி அமைப்பின் நிறுவனா் முகமது முஸ்தாபாவுக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
தென்காசி மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலா் நம்பிராஜன், பட்டிமன்ற பேச்சாளா் மஹ்முதா சையத், ஆழ்வாா்குறிச்சி மாடசாமி, ரெட்டியாா்பட்டி செல்வராஜ், சுந்தரபாண்டியபுரம் முத்து சோபா, மாரியப்பன்,
சுரண்டை கலாமின் கனவுகள் , சிங்கப் பெண்கள் ரத்த தான கழகம் , எஸ்டிபிஐ மருத்துவ அணி , இந்தியன்லைட் ஹவுஸ் அமைப்பு,விஎன்.சரவண பாண்டியன் ரத்த தான கழகம், வ.உ.சி ரத்த தான கழகம் , தென்காசி ரத்த தான கழகம் ஆகிய அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.