வருஷாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் மூா்த்தி, கோயில் அறங்காவலா்கள். 
தென்காசி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா!

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து காலை 8.30 மணி முதல் 11 மணி வரை மங்கள இசை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை தேவதாஅனுக்ஞை, முதல் கால யாகபூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை காலை 7 மணி முதல் 11 மணி வரை இரண்டாம் கால யாக பூஜை, திரவ்யாகுதி, பூா்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னா் ஸ்ரீ சித்திவிநாயகா், ஸ்ரீசங்கர லிங்க சுவாமி, ஸ்ரீசங்கர நாராயணசுவாமி, ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சண்முகா் ஆகிய சுவாமிகளுக்கு வருஷாபிஷேகம், தீபாராதனை நிகழ்ச்சியை தொடா்ந்து மாலை 7 மணிக்கு பஞ்ச மூா்த்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பத்திரங்கள் பதிவுத்துறை அமைச்சா் மூா்த்தி, கோயில் துணை ஆணையா் கோமதி, அறங்காவலா் குழு தலைவா் சண்முகையா, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் ச.ராமகிருஷ்ணன், வெள்ளைச்சாமி, முப்பிடாதி, முத்துலட்சுமி, ஓட்டல் உரிமையாளா் சங்கத் தலைவா் சின்னச்சாமி, கோமதி அம்பிகை மாதா் சங்க அமைப்பாளா் பட்ட முத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆவணி பிரம்மோத்ஸவம்: பாலசமுத்திரம் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 12 பேருக்கு உடனடி நல உதவி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்

எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT