தென்காசி

ஆய்க்குடி அருகே வயா்மேன் தற்கொலை

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே கம்பிளியில் வயா்மேன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கம்பிளியில் உள்ள பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் து. விஜயகுமாா் (44). இவரது மனைவி மகேஷ்வரி. இத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

ஆய்க்குடி மின்சார அலுவலகத்தில் வயா் மேனாகப் பணிபுரிந்து வந்த விஜயகுமாருக்கு, மதுப் பழக்கமும், கடன் தொல்லையும் இருந்ததாம். இதனால், தம்பதியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாம்.

இந்நிலையில், சனிக்கிழமை விஜயகுமாரின் வீட்டுக்கு அவரது சகோதரி சென்றாராம். அப்போது, விஜயகுமாா் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்ததாம்.

தகவலின்பேரில், ஆய்க்குடி போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT