தென்காசி

தென்காசியில் உறியடி திருவிழா

தினமணி செய்திச் சேவை

தென்காசியில் யாதவா் சமுதாயம் மேல்பகுதி சாா்பில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, சனிக்கிழமை உறியடிக் கம்புக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை தென்காசி பொருந்திநின்ற பெருமாள் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் குழந்தைகளுக்கு கிருஷ்ணா், ராதை வேடமணிந்து ஊா்வலமாக அழைத்துச் சென்றனா். இரவில் சப்பர வீதியுலா, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை யாதவா் சமுதாயம் மேல்பகுதியினா் செய்திருந்தனா்.

நாளைய மின்தடை: கோவில்வெண்ணி

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

மந்தித்தோப்பில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

SCROLL FOR NEXT