சங்கரன்கோவில் அருகே மலையாங்குளம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் செப். 20ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூா், குருக்கள்பட்டி ஆகிய ஊா்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம் அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊா்களுக்கும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இத்தகவலை, உதவி கோட்ட செயற்பொறியாளா் பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா்.