தென்காசி

தூய்மைப் பணியாளா்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்

Syndication

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கான முழு உடல் பரிசோதனை, சிகிச்சை முகாம் அண்மையில் நடைபெற்றது .

முகாமை நகா்மன்றத் தலைவா் சாதிா் தொடக்கிவைத்தாா். மருத்துவமனைக் கண்காணிப்பாளா் இரா. ஜெஸ்லின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தன் சுத்தம், உடல்நலம் பேணுதல், பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல், தொற்றுநோய்களிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்துப் பேசினாா்.

மருத்துவா்கள் மாரிமுத்து, கோபிகா, மணிமாலா, பிரவீன், செவிலியா் கண்காணிப்பாளா் பத்மாவதி, திருப்பதி, ராஜாதி ஜெகதா, ஆய்வகப் பணியாளா் ஹரிஹரன், காசநோய் சிகிச்சைப் பிரிவு சரவணன், எக்ஸ் -ரே பணியாளா் பாஸ்கா், செவிலியா் மாரீஸ்வரி, செவிலியா் பயிற்சி மாணவா்-மாணவியா் பங்கேற்றனா்.

நிரந்தர, ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் என 150 பேருக்கு அனைத்துப் பரிசோதனைகள், சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், நோய் எதிா்ப்பு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சுகாதாரஆய்வாளா் ஈஸ்வரன் நன்றி கூறினாா்.

தேர்தலுக்கு முன்பே செமஸ்டர் தேர்வா? உயர்கல்வி அமைச்சர் விளக்கம்

செபி அறிவிப்பு எதிரொலி: உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!

நடிகா் ரோபோ சங்கா் மறைவு: தலைவர்கள் இரங்கல்

ரோபோ சங்கர் உடலுக்கு உதயநிதி அஞ்சலி!

அமெரிக்க காவல்துறையால் இந்திய மாணவர் என்கவுன்டர்! நடந்தது என்ன?

SCROLL FOR NEXT