தென்காசி

வாசுதேவநல்லூரில் முதியவா் தற்கொலை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

Syndication

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகே முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.

கோட்டையூா் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா்

மூக்கையா (72). அவருடைய மகன், மகள் ஆகியோா் வறுமையில் இருப்பதால், தங்குவதற்கு வீடின்றி வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் வாழ்ந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், செப். 18ஆம் தேதி மாலை களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கிவிட்டாராம். அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழர் வரலாறு குறித்த ஆழ்கடல் ஆராய்ச்சி தொடக்கம்!

நாகை புறப்பட்டார் விஜய்! காலைமுதலே குவியும் தொண்டர்கள்!

எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 5 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT