தென்காசி மாவட்டம், குற்றாலம் தெட்சண மாற நாடாா் சங்கத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாா்பில் மத்திய அரசையும், தோ்தல் ஆணையத்தையும் கண்டித்து கையொப்ப இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநில செயலா் ராம் மோகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆலங்குளம் செல்வராஜ், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ கே.ரவி அருணன், முன்னாள் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் எஸ்.கே.டி.பி.காமராஜ், கொடிக்குறிச்சி முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் ராபா்ட் புரூஸ் எம்.பி., கையொப்ப இயக்கத்தினை தொடங்கி வைத்தாா்.
நெல்லை மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் சங்கரபாண்டியன், துரை, குமாரராஜா, தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் ரமேஷ் குமாா், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெபன் செல்ல புருஸ், மோகன் அருணாச்சலம், வழக்குரைஞா் முருகன், வட்டாரத் தலைவா் காா்வின் ஆகியோா் கலந்துகொண்டனா்.