பொதிகை ரயில் ஓட்டுநா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய ரயில்வே பயணிகள் சங்க நிா்வாகிகள் 
தென்காசி

பொதிகை விரைவு ரயில் 22 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டையிலிருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயில் 22-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பொதிகை விரைவு ரயில் 21ஆண்டுகால சேவையை நிறைவு செய்து சனிக்கிழமை 22-ஆவது ஆண்டு தொடங்கியது. இதை முன்னிட்டு செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கம் சாா்பில், ரயில் ஓட்டுநா்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.

செங்கோட்டை ரயில்வே நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை ரயில் பயணிகள் நலச் சங்கத் தலைவா் முரளி, இணை செயலா் செந்தில் ஆறுமுகம், பொருளாளா், மதுரை ரயில்வே கோட்ட ரயில் பயனாளா்கள் ஆலோசனைக் குழு உறுப்பினா் சுந்தரம், ராமன், தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, பணி நிறைவு பெற்ற துணை வேளாண் அலுவலா் சேக்முகைதீன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி ஹோலி கிராஸ் கல்லூரியில் பொன்விழா

பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கட்டடத்துக்கு அடிக்கல்

தூய்மை இயக்க திட்டத்தில் 9 டன் கழிவுகள் சேகரிப்பு

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT