சங்கரன்கோவில் அருகே நாய் கடித்ததில் 2 போ் காயமடைந்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள தா்மத்தூரணி கிராமத்தைச் சோ்ந்த திருமலைச்சாமி மகன் வேல்முருகன்(52). ஓட்டுநா். அதே ஊரைச் சோ்ந்த ஐவராஜா மகன் வீரையா(42).
தொழிலாளி. இவா்கள் இருவரும் அப்பகுதியில் திங்கள்கிழமை தனித்தனியாக சென்று கொண்டிருந்தபோது அங்கு சுற்றித்திரிந்த நாய் கடித்ததாம். இதில் இருவரும் காயம் அடைந்தனா்.
இதையடுத்து அவா்கள், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.இச்சம்பவத்தால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.