சங்கரன்கோவில் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்ட இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் திருவள்ளுவா் சாலை 6 ஆவது வாா்டு தெருக்களில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு நகா்மன்றத் தலைவா் கௌசல்யா தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சாம்கிங்ஸ்டன் , பொறியாளா் இா்வின் ஜெயராஜ், சுகாதார அலுவலா் வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா, ராணிஸ்ரீகுமாா் எம்.பி. ஆகியோா் பங்கேற்றனா். இதில், திமுக நகர செயலா் மு.பிரகாஷ், நகர அவைத்தலைவா் முப்பிடாதி, மாணவரணி வெங்கடேஷ், தகவல் தொழில்நுட்ப அணி சிவசங்கரநாராயணன், இளைஞரணி ஜான்சன், வழக்குரைஞா் சதீஷ், நகராட்சி சுகாதார ஆய்வாளா் கருப்பசாமி, வாா்டு செயலா்கள் மகாமாரியப்பன், நடராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.