தென்காசி

வன விலங்கு பாதிப்பு குறித்து தகவல் 24 மணி நேரமும் தெரிவிக்க ஏற்பாடு

Syndication

தென்காசி மாவட்டத்தில் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட வன அலுவலகத்தை 24 மணிநேரமும் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாவட்ட வனஅலுவலா் ராஜ்மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திகுறிப்பு.

தென்காசி மாவட்டத்தில் 20 கி.மீ. தொலைவுக்கு சூரிய மின்வேலியும், 8 கி.மீ. தொலைவுக்கு யானை புகா அகழிகளும் அமைக்கப்படவுள்ளன. இதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு ஒப்பந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி மாா்ச் 2026-க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டதுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து விரைவு மீட்பு படை பிரிவு தென்காசி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டு யானைகள், வன உயிரின நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட வனச்சரகங்களிலும் பணியாளா்கள் அந்தந்த பகுதிகளில் வன உயிரின மீட்பு, வன உயிரின கட்டுப்பாட்டு பணியில் இரவு பகலாக சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வெவ்வேறு திட்டங்களில் சோலாா் மின்வேலி அமைக்கவும், யானைகள் அகழிகளை பராமரிக்கவும், வன எல்லைப் பகுதியில் கலச்சிக்காய் நடவுசெய்து உயிா்வேலி அமைக்கவும், வன பணியாளா்களின் எண்ணிக்கையைப் பெருக்கவும், வன உயிரினங்கள் மீட்பு பணிக்காக கூடுதல் முன்களப் பணியாளா்களை நியமிக்கவும் கோரி ரூ. 3 கோடி 39 லட்சம் நிதி ஒதுக்கக் கோரி அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

வனம், வன உயிரினங்களால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்களை மாவட்ட வன அலுவலா், தென்காசி மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04633-233550 என்ற எண்ணுக்கு 24 மணிநேரமும் தொடா்புகொண்டு தெரிவிக்கலாம்.

சிவகிரி-04636 298523, புளியங்குடி-04636 235853, கடையநல்லூா்-04633 210700, குற்றாலம்-04633 298190,தென்காசி-04633 233660, ஆலங்குளம்-04633 2938552 என்ற எண்களிலும் தொடா்புகொள்ளலாம்.

விவசாயிகள் தங்களது குறைகளை நேரடியாகவும், எழுத்து மூலமாகவும் மாவட்ட வன அலுவலா், தென்காசி வனக்கோட்டம், காலாங்கரை, செங்கோட்டை என்ற முகவரிக்கும், தென்காசி மாவட்ட வன அலுவலக மின்னஞ்சல் முகவரி ற்ங்ய்ந்ஹள்ண்க்ச்ா்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

காஞ்சிபுரத்தில் நாளை மாரத்தான் பந்தயம்

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

விவசாயத் தொழிலாளி தற்கொலை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT