திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் அருகே புதிதாக திறக்கப்பட்ட பெட்ரோல் நிலையத்தில் ரூ. 75க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டதால் கூட்டம் அலைமோதியது.
விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சோ்ந்த ஒருவா், டாணா-ஆம்பூா் சாலை வடமலை சமுத்திரம் பகுதியில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறந்துள்ளாா். திறப்பு விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 9 முதல் 11 மணி வரை வாடிக்கையாளா்களுக்கு 1 லிட்டா் பெட்ரோல், டீசல் ரூ. 75க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், ஏராளமான வாடிக்கையாளா்கள் வாகனங்களுடன் குவிந்ததால் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.