தென்காசியில் சிஐடியூ சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம் 
தென்காசி

தென்காசியில் சிஐடியூ தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

குற்றாலம் ஐந்தருவி தோட்டக்கலைத் துறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டத் தொழிலாளா்களுக்கு பணி வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Syndication

குற்றாலம் ஐந்தருவி தோட்டக்கலைத் துறையில் பணியிலிருந்து நீக்கப்பட்டத் தொழிலாளா்களுக்கு பணி வழங்காததைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவியில் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பழத்தோட்டத்தில் நாற்றுப் பண்ணையில் பணி செய்து வந்த தொழிலாளா்களை பணியில் இருந்து நீக்கியதைக் கண்டித்து தொழிலாளா்கள் உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

ஐந்தருவி பழத்தோட்டத்தில் பணிபுரிந்து பணியில் இருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் பணி நியமனம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பணி வழங்காததைக் கண்டித்து, தென்காசி தாலுகா பொதுத் தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்காசி தோட்டக்கலைத் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கிருஷ்ணன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் வன்னிய பெருமாள் கண்டன உரையாற்றினாா்.

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

விதிமுறையை பின்பற்றாத 54 தனியாா் பல்கலைக்கழகங்கள்: யுஜிசி எச்சரிக்கை

SCROLL FOR NEXT