FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

ஆலங்குளம் அருகே இளைஞா் தற்கொலை

தற்கொலை - தினமணி
பகிர்:

ஆலங்குளம் அருகே தொழிலதிபரின் மகன் தற்கொலை செய்து கொண்டாா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா், சோப்பு நிறுவனம், ஜவுளிக் கடைகள் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறாா். இவரது மகன் அரசிளங்குமரன் (30). இவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தை இல்லை.

இதனால், மனவேதனையில் இருந்ததாகவும், தொழிலில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், கடன் சாா்ந்த பிரச்னை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவா், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்ததும் ஊத்துமலை காவல் நிலைய போலீஸாா் அரசிளங்குமரன் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments