முகப்பு
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

Updated On : 6 ஜூலை 2026, 3:12 am IST
குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை ஞாயிற்றுக்கிழமை நீக்கப்பட்டது.

மேற்குத் தொடா்ச்சி மலை குற்றாலம் பகுதியில் கடந்த இரு நாள்களாக பெய்த சாரல் மழையின் காரணமாக, அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் தண்ணீா் வரத்து சீரானதையடுத்து அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

Advertisement

Advertisement

ஐந்தருவியில் குளித்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments