முகப்பு
தென்காசி

தென்காசி மக்கள் குறைதீா் கூட்டத்தில் 683 மனுக்கள் ஏற்பு

Updated On : 30 ஜூன் 2026, 3:01 am IST
பொதுமக்களிடம் புகாா் மனுக்களைப் பெற்றாா் மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன்.
பகிர்:

தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 683 மனுக்கள் பெறப்பட்டன.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன் தலைமை வகித்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இதர மனுக்கள் என 683 மனுக்கள் பெறப்பட்டன.

Advertisement

Advertisement

பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு மாவட்ட வருவாய் அலுவலா் அறிவுறுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments