முகப்பு
தேனி

குடும்ப அட்டை தொடர்பான குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும்: ஆட்சியர்

குடும்ப அட்டை தொடர்பான குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:59 am IST
பகிர்:

குடும்ப அட்டை தொடர்பான குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.

  ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாமை, மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:

  பொது விநியோகத்தை செயல்படுத்தும் வட்ட வழங்கல் அலுவலகத்தில், பொதுமக்கள் தங்களின் தேவைக்கென குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கடைமாற்றம், பிழைதிருத்தம் போன்ற கோரிக்கைகளுக்காக நாள்தோறும் அதிகப்படியான மனுக்கள் பெறப்படுகின்றன. வட்ட இவ்வாறு பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும் என்பதால், பொது விநியோகத் திட்டம் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

  ஆண்டிபட்டி வட்டத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 21 (புதன்கிழமை) முதல் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டு, 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சிறப்பு முகாமில், பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை தொடர்பான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து கொள்ளலாம். இந்த முகாமை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார்.

   மேலும், இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் பெயர் சேர்த்தல் தொடர்பாக 88 மனுக்களும், பெயர் திருத்தம் தொடர்பாக 32 மனுக்களும், பெயர் நீக்கம் தொடர்பாக 48 மனுக்களும், முகவரி மாற்றம் மற்றும் கடை மாற்றம் தொடர்பாக 6 மனுக்களும், புதிய குடும்ப அட்டை வேண்டி 6 மனுக்களும், இதர கோரிக்கைகள் தொடர்பாக 4 மனுக்கள் உள்பட 184 மனுக்கள் பெறப்பட்டு, வருவாய் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்களால் பரிசீலனை செய்யப்பட்டு, 174 மனுக்கள் ஏற்கப்பட்டது.

   கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், புதிய குடும்ப அட்டை தொடர்பாக 6 மனுக்களும் இதர கோரிக்கை தொடர்பான 4 மனுக்கள் உள்பட மொத்தம் 10 மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

  ஆய்வின்போது, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சரோஜா, ஆண்டிபட்டி வட்டாட்சியர் ராஜேந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் ராஜவேல் மற்றும் துணை வட்டாட்சியர் மணிமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.