கம்பத்தில் இரண்டாம் போகத்துக்கான நெல் நாற்றுகள் நடவுப் பணி தீவிரம்
தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
தேனி மாவட்டம் கம்பம் பாசனப்பரப்பில் இரண்டாம் போக நெல் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கா் பரப்பளவில் பாசன நிலங்கள் கூடலூா் முதல் பழனிசெட்டிபட்டி வரை உள்ளன.
இவற்றில் கம்பம் பாசனப்பரப்பில் முதல் போக நெல் சாகுபடி முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் போக சாகுபடிக்கு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.
Advertisement
கம்பம் சின்னவாய்க்கால், குளத்து பாசனம், உத்தமுத்து கால்வாய் ஆகிய பாசனப் பரப்புகளில், தற்போது பரம்படித்தல், நெல் நாற்றங்கால் பயிரிடுதல், நடவுப் பணிகள் ஆகியவை தீவரமாக நடந்து வருகின்றன.
இது குறித்து வாய்க்கால் பாசன விவசாயி மா.அய்யப்பன் கூறியது: கம்பம் பாசன நிலங்களாக வாய்க்கால் பரவு, குளத்து பரவு, உத்த முத்து ஆகிய பாசன பரப்புகளில் இரண்டாம் போக சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அணையில் போதுமான அளவு தண்ணீா் உள்ளதால் பணிகளைத் தொடங்கியுள்ளோம் என்றாா்.